புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2015

குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம் (வீடியோ இணைப்பு)

பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸெல்சில் குப்பைகளை சேகரிக்கும் நபர் ஒருவர், பாரீஸ் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டுகள் நிரம்பிய மேலாடை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அதே இடத்தில் சில தினங்களுக்கு முன்னர் பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேதிக்கப்பட்ட அப்தெசெலாமின் கைப்பேசி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அங்கு வெடிகுண்டு மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு விதமான கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெல்ஜியத்தை சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு வல்லுநர் கிளாட் மோனிக்வெட் கூறியதாவது, இதற்கு இரண்டு காரணங்களை யூகிக்க முடியும், ஒன்று அப்தெசெலாம் பயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் வேண்டாம் என விட்டுச்சென்றிருக்கலாம், இரண்டாவதாக அது சரியாக இயங்காக வெடிகுண்டு மேலாடையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனால் பெல்ஜியம் பிரதமர் உச்சக்கட்ட பாதுகாப்பை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வலியுறுத்தியுள்ளார்.
இதே போல் பிரான்சில் உள்ள சாடிலன்-மாண்ட்ரோக் பகுதியிலும் பிரான்சில் பயன்படுத்தப்பட்ட TATP வகை வெடிபொருள் அடங்கிய மேலாடை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.