புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2015

கனடாவில் single mother, separate or divorce ஆக இருக்கும் சில தமிழ்ப் பெண்களைக் குறிவைக்கும் தமிழ் நபர்கள்? அவர்களை பாலியல் அடிமையாகச் வைத்திருக்கும் மர்மம் என்ன? - See more at: http://www.canadamirror.com/canada/52810.html#sthash.S91G3cA7.k8yiLAFd.dpuf


தனித்த குடும்பமாக அல்லது கணவரைப் பிரிந்து இருக்கும் (single mother, separate or divorce) சில பெண்களைக் குறிவைத்து அவர்களை பலவந்தப் பாலியற்குள் உட்படுத்தும் ஒரு குழு பற்றி கனடா வாழ் தமிழர்கள் விழிப்பாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.
கனடாவில் இவ்வாறான single mother, separate or divorce குடும்பப் பிளவுகளால் மாத்திரமல்ல, மாறாக கணவர்மார் அப்பாவிகளாக இருக்கும் குடும்பப் பெண்களிடமும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களை தனிமையில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.
உணவகங்கள், அல்லது சிற்றுண்டிச்சா
லைகள் என அழைக்கப்படும் இப் பெண்களும் இவ்வாறான சந்திப்புக்களிற்குச் சென்று அவர்களுக்கு நெருக்கமானவுடன், இந்தப் பெண்களிற்குத் தெரியாமலே அவர்கள் அருந்தும் பானத்தில் போதைப் பொருள் கலக்கப்படுகின்றது.
GHB or Gamma-Hydroxybutyrate என்பதே முக்கியமாக அந்தப் பெண்கள் குடிக்கும் தண்ணீரிலோ அல்லது குளிர்பாணங்களிலோ கலக்கப்படுகின்றது. இது தண்ணீரின் நிறத்தையொத்தே இருப்பதால் ஒரு சிறிது கலக்கப்பட்டாலும் இது பாவிப்பவருக்கு இதன் தன்மை தெரிவதில்லை.
இவ்வாறு இந்த போதைப் பொருளைத் தெரியாமல் உட்கொண்டவர்கள் தங்களின் மத்திய நரம்பு மண்டலச் செயற்பாட்டை இழக்கும் போது அவர்களிற்குத் தெரியாமலே அவர்கள் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படுவதுடன், படமும் எடுக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறாக எடுக்கப்பட்டப்படங்களை வைத்து இந்த நபர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றார்கள். ஆனால் தாங்கள் இது தொடர்பாக புகார் செய்தால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தால் பெண்கள் புகார் கொடுக்கத் தயங்குகின்றார்கள்.
ஆனால் உண்மையிலேயே கனடாவின் குற்றவியற் சட்டம் பெண்களை வெகுவாகப் பாதுகாக்கின்றது. தாங்கள் புகார் கொடுக்கும் போது தங்களின் புகார் பற்றியோ அல்லது வழக்குப் பற்றியோ வெளியே தெரிய வேண்டாமென்றால் அதற்கு நீதிமன்றம் ஆவண செய்து வழக்குகள் இரகசியமாகவே விசாரிக்கப்படும்.
கனடாவின் குற்றவியற் சட்டத்தின் கீழ் கணவன் மனைவி கூட ஒருவரின் ஒத்தாசையின்றி மற்றையவருடன் உடலுறவுக்கு வற்புறுத்த முடியாது என்று இருக்கும் நிலையில் இவ்வாறான குற்றங்களிற்கு பாரதூரமான பல சட்டங்களுண்டு.
எனவே கனடாவில் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி Aggravated sexual assault / Historical assault / Sexual assault / sexual exploitation இவ்வாறான தாக்குதல்களிலிருந்து தங்களை யாருக்கும் தெரியாமல் இரகசயமாக விடுவித்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு உங்களிற்கு இரகசியம் பேணி உதவுவதற்காக பல தமிழ் பேசும் சட்டஞ்சார் துறை வல்லுனர்களும், தமிழ் மனிதவுரிமை அமைப்புக்களும் தொண்டார்வ ரீதயில் பங்காற்றி வருகின்றன. அவர்களை பாதிக்கப்பட்ட யாரும் எந்தவிதத் தயக்கமுமின்றி நாடலாம்.
அவர்கள் உங்களின் விவரங்கள் தொடர்பான இரகசியத்தன்மையைப் பேணியே, உங்களின் பூரண சம்மததிற்கு உட்பட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ad

ad