புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2015

கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு

கனடாவின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ரொரன்டோவில் அமைந்துள்ள கந்தசாமி ஆலயம் இவ்வாறு புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ரொரன்டோ கந்தசாமி ஆலயம் இவ்வாறு பணம் வழங்கியமை தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்திய வந்ததாகவும் கொழும்பில் வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் இயக்கம் கனடாவின் பயங்கரவாத இயக்கப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆயலத்தின் பூசகர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கந்தசாமி ஆலயத்தினை பலவந்தமான அடிப்படையில் உலகத் தமிழர் இயக்கம் கட்டுப்படுத்தி வந்ததாக கனேடிய அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தினை பயன்படுத்தி புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு பிழையானது என ஆலயத்தின் நீண்ட கால தன்னார்வ தொண்டர்களில் ஒருவரான தனபாலசிங்கம் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஆலயம் தொடர்புபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆலயம் அனைவருக்கும் பொதுவானது எனவும் எந்தவொரு தரப்பினரையும் வழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என தடுக்க முடியாது

ad

ad