புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2015

பாடசாலை மாணவ மாணவியர் விடுதிகளில் உல்லாசம் ; பொலிசார் அதிரடி


கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள்,மற்றும் ஹோட்டல்களில் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
ஞாயிற்றுக்கிழமை (22/11/2015)காலை மற்றும் மாலை நேரங்களிலும் கந்தளாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.
                      கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குச் செல்வதாக பெற்றோர்களிடம் கூறி விட்டு பாடசாலை மாணவ மாணவிகள், இளம் காதலர்கள் ஹோட்டல்களிலும் இப்பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளிலும் உல்லாசம் அனுபவிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
                            அண்மைக் காலமாக இப்பிரதேசங்களில் தங்கும் விடுதிகளில் பொலிஸாரால் பல பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் பிடிபட்டு பொலிஸாரினால் அவர்களின் பொற்றோர்களிடம் எச்சரிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.