புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2015

தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தலாம் – அனுமதித்தார் வாசுதேவ நாணயக்கார

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தலாமென்றும், ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற போர்வையில் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்ட இடமளிக்கப்போவதில்லையென்றும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளில் யாராவது ஈடுபட்டால், அதனை கடுமையாக எதிர்ப்போம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அரசு அனுமதிக்க வேண்டுமென்பதற்கு தாம் எவ்வித எதிர்ப்பும் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இன்று நாடாளுமன்றில் செல்வம் அடைக்கலநாதன் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.