புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2015

மற்றுமொரு ஆயிரம் புள்ளிகள் அசைக்க முடியாத ஜோகோவிச்

01
லண்டனில் நடைபெற்ற 8 முன்னணி வீரர்கள் மற்றும் 8 முன்னணி ஜோடிகளுக்கு இடையிலான உலகச் சம்பியன்ஷிப் டென்னிஸ்
போட்டியின் ஒற்றையருக்கான இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் ரோஜர் பெடரரை வீழ்த்தி நான்காவது ஆண்டாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.குழு நிலையிலான போட்டியில் பெடரரிடம்  தோற்றுப் போயிருந்த  ஜோகோவிச் இறுதி ஆட்டத்தில் வென்ற மை ஆச்சரியமே
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – பெடரர் மோதினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் வெற்றிகரமாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக பட்டத்தை அவர் தட்டிச் சென்றுள்ளார்.