-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

18 டிச., 2015

70 வயதான முதியவர்கள் வாகனம் ஓட்ட உடல் பரிசோதனை அவசியம்: வருகிறது புதிய சட்டம்

சுவிட்சர்லாந்து நாட்டில் 70 வயதிற்கு மேலான முதியவர்கள் வாகனங்களை இயக்க உடல் பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய சட்டம்
நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் மக்கள் கட்சியை(SVP) சேர்ந்த Maximilian Reimann(73) என்ற பாராளுமன்ற உறுப்பினர், ’70 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வாகனங்களை இயக்க அவர்களின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு கொண்டு வந்தார்.
இந்த கோரிக்கை தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சுமார் 97 முதல் 82 வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதாவது, 70 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் 2 வருடங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் 75 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என வாக்களித்துள்ளனர்.
மேலும், மேல் கூறப்பட்டுள்ள வயதில் உள்ள முதியவர்கள் வாகனம் இயக்குவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான மனு பாராளுமன்ற மேல் சபையின் முன்னிலையில் சமர்ப்பிக்க உள்ள நிலையில், இதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட்டு அந்த சட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், 70 வயதிற்கு மேலான வயதுடையவர்கள் வாகனங்களை இயக்க உடல் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்