புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2015

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை

சுவிஸ் நாட்டில் சுமார் 2,600 வங்கி கணக்குகள் கேட்பாரற்ற நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சுவிஸ் நாட்டின் வங்கிகளில் ஏராளமான கருப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகின்றன.
இதேபோல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிக்கணக்குகளில் சுமார் 2,600 கணக்குகள் கேட்பாரற்ற நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 80 பாதுகாப்பு பெட்டகங்களும் யாரும் உரிமைகோராத நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வங்கிக்கணக்குகளில் 4 கணக்குகள் இந்தியர்களுக்கு சொந்தமானவை.
அவை, மும்பையை சேர்ந்த பியர் வாச்செக், டேராடூனை சேர்ந்த பகதூர் சந்திரசிங், பாரீசை சேர்ந்த மோகன்லால், மற்றும் கிஷோர் லால் ஆகியோருடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்களது வங்கிக்கணக்கில் உள்ள தொகை குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
எனவே இவர்களின் வாரிசுகள், 5 ஆண்டுகளுக்குள் இவற்றின் உரிமையை கோரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சுமார் 44.5 மில்லியன் டொலர் மதிப்பிலான பணம் கடந்த 1955ஆம் ஆண்டு முதல் சுவிஸ் வங்கி கணக்குகளில்  இருந்து எடுக்கப்படாத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad