-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

18 டிச., 2015

மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் சிராந்தியிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மானிக்கப்பட்ட வீடு ஒனறை மிகக் குறைந்த விலைக்கு தமது ஊடக ஆலோசகர் ஒருவருக்கு வழங்கியதாக சிராந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் சிராந்தியிடம் இந்த விடயம் குறித்து வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் மேல் மதிக்கத்தக்க வீடு நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சட்டத்திற்கு முரணான வகையில் மிகக் குறைந்தளவு பணத்திற்கு தமது ஊடக ஆலோசகருக்கு இந்த வீட்டை வழங்கியதாகவும் சிராந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அப்போது பதவியில் இருந்த பல அரசாங்க அதிகாரிகளிடம் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்