புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி விஷேட உரை

நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்படவுள்ளமை குறித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள நிகழ்வுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக இவ்விடயத்தை தெரிவித்தார்.
ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி இந்த உரையை ஆற்றவுள்ளதாக, அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கையின் அடுத்த அரசியலமைப்பை உருவாக்கும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை உருவாக்கும் சபையாக நாடாளுமன்றம் மாற்றப்படவுள்ளமை குறித்து ஜனாதிபதியின் உரை அமையும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குதல், புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து தற்போது உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி மக்களது அபிப்பிராயங்களை கருத்திற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ad

ad