புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் த.தே.கூ மூன்று உறுப்பினர்கள்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளும் வகையில் 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த குழுவுக்கான மூன்று பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமிக்கவுள்ளது.
குறித்த குழுவில் பிரதிநிதித்துவம் பெறும் 19 பேரும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். எனினும் அந்தப் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகளே பெயரிடவுள்ளன.
அதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தலா ஏழு உறுப்பினர்களை நியமிக்கவுள்ள அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று உறுப்பினர்களையும் மக்கள் விடுதலை முன்னணி இரண்டு உறுப்பினர்களையும் நியமிக்கவுள்ளன.
நியமனம் பெறும் உறுப்பினர்கள் நாடுபூராகவும் சென்று புதிய அரசியலமைப்பு பற்றிய பொதுமக்களின் கருத்துக்களைப் பெறவுள்ளனர்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக நியமிக்கும் பிரேரணை ஜனவரி மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை இல்லாதொழித்து அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கல் மற்றும் புதிய தேர்தல் முறையினை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வகையிலான புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே இந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
தேர்தல் காலத்தில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad