இன்று ஆய்வாளர்களின் பல்வேறு ஆய்வுகளை எடுத்துப்பார்த்தால் மேலை நாடுகளில் இந்து மத்தினை தழுவுகின்றவர்களது எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதனால் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்துக்களாக மாறும் தொகை அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது என இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் முழு இலங்கைக்குமான யுவதிகளின் பொறுப்பாளர் அன்னலெட்சுமி தெரிவித்தார்.
இந்து ஸ்வயம் சேவக சங்கத்தன் 7 நாட்கள் கொண்ட ஆளுமை பண்பை விருத்தியாக்கும் பயிற்சி முகாம் கல்முனை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் பயிற்சி முகாமின் தலைவர் ராஜகுலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமிற்கு அதிதிகளாக இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் முழு இலங்கைக்குமான யுவதிகளின் பொறுப்பாளர் அன்னலெட்சுமி , அம்பாறை மாவட் பொறுப்பாளர் குணசிங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்தும் இந்து ஆண் மாணவர்கள் 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கைக்கு தேவையான ஆளுமைத்தன்மை கொண்ட பல விடயங்களையும் கற்றுக்கொண்டார்கள்.
இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.
அன்று எமது நாட்டிற்கு வந்து தங்களது மதத்தினை பரப்பியவர்கள் இன்று எமது மதத்தின் அறிவியல் கோட்பாடுகளை அறிந்து கொண்டு ஐறோப்பிய நாடுகளில் வாழும் பலர் இந்துவாக மாறிக்கொண்டு வருகின்றார்கள்.
குறிப்பாக பிரித்தானியா, அமேரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்து தருமத்தின் தன்மையினை அறிந்து கொண்டு அதன் பால் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றார்கள் அமேரிக்க நாட்டை பொறுத்தவரையில் 2013 ஆண்டு பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்றில் இந்து நாடாக மாறிவரும் அமேரிக்கா என குறிப்பிடப்படடிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
எம்மதமும் சம்மதம் என்று கூறும் ஒரே மதம் இந்து மதம் மாத்திரமே ஆனால் இந்து தர்மத்தில் என் மதம் எனக்கு சம்மதமே என்றுதான் கூறப்பட்டிருக்கின்றது ஆனால் நாங்கள் அதனை விடுத்து அனைத்தையும் உள்வாங்குகின்றவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன்று 7 நாட்கள் முடிவில் இந்து தர்மத்தின் பல வழிமுறைகளை கற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கு உங்களால் செய்யத்தக்க நல்ல விடயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி சமுதாயத்திற்காகவேண்டி அர்ப்பணிப்புடன் சேவை செய்ய அனைவரும் முன்னிற்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.