புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

சிம்புவின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!




பீப் பாடல் விவகாரத்தால்  நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த 12-ஆம் தேதி புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, சிம்பு, அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், டிசம்பர் 19-ஆம் தேதி இருவரும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்தனர். இருவரும் அவகாசம் கேட்டு காவல்துறைக்குக் கடிதம் எழுதினார்கள்.

இந்நிலையில் சிம்பு, அனிருத் ஆகிய இருவரும் ஜனவரி 2-ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார் சிம்பு. இந்த மனு தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது.

சிம்புவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. முன்ஜாமீன் வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அரசு தெரிவித்தது. பீப் பாடல் பரவுவதைத் தடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி கோவை காவல்நிலையத்தில் சிம்பு ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ad

ad