புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

ஃபிபா தலைவர் மீதான் ஊழல் குற்றச்சாட்டு நிரூபனம்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான செப் பிளேட்டர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் சம்மேளன
பதவியில் நீடிக்க 8 வருடங்கள் தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபிபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த செப் பிளேட்டர் கடந்த 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து அணித்தலைவருக்கு சுமார் 2 மில்லியன் பிராங்க் பணத்தை முறைகேடாக அளித்து ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
மேலும், ஃபிபா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று ஃபிபா நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
வழக்கினை விசாரணை செய்தபோது, செப் பிளேட்டர் மற்றும் மைக்கேல் பிளாடினி ஆகிய இருவரும் தங்களது பதிவிகளை பயன்படுத்தி வரம்பு மீறி செயல்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, செப் பிளேட்டருக்கு 50,000 பிராங்க், மைக்கேல் பிளாடினிக்கு 80,000 பிராங்க் அபராதமும், இருவரும் ஃப்பா பதவிகளை தொடர 8 வருடங்களுக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளனர்.
எனினும் ஃபிபாவிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து லூசென்னேவில் உள்ள மத்தியஸ்த்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செப் பிளேட்டர் தெரிவித்துள்ளார்.

ad

ad