புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முகம்கொடுக்க தயாராகிறது இலங்கை


யுத்தக்குற்ற விசாரணை தொடர்பான கலந்தாலோசனைகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கம் உறுதியான பொறிமுறைகளை கையாளாத நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது இலங்கை விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இன்று இடம் பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே வெளிவிவகார பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கம் பின்னிற்கப் போவதில்லையெனவும் ஜெனிவா கூட்டத் தொடருக்கு முகம்கொடுக்கக் கூடிய வகையில் செயற்பாடுகளை கையாண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த அரசாங்கம் பொறுப்புக் கூறல் விடயத்தில் மிகவும் மோசமாக செயற்பட்டது.
எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை வெற்றிகொண்டதாகவும் வெளிவிவகார பிரதியமைச்சர் தெரிவித்தார். 
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமைய கலப்பு விசாரணை முறைமை ஒன்றை கையாள்வதாகவும் அறிவித்தது.

ad

ad