புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்களை ஆராய்வதற்கு உபகுழு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உபகுழு  நியமக்கப்பட்டுள்ளதாக பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக் கலாநிதி பி. லக்ஸ்மன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு இன்று யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதன் முடிவில் இடமபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
இந்த மக்கள் பேரவையானது  அடுத்த கட்டதை நோக்கி செல்லவேண்டி உள்ளது. அதன் அடிப்படையில் தீர்வுதிட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு உப குழு ஒன்று நியமிக்கபட்டுள்ளது. இக்கழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐந்து அங்கத்தவர்களை கொண்ட வெளிநாட்டு நிபுணர் குழு இணைக்கபடவுள்ளது.  தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பாக ஆவணங்கள் தயாரிக்கபட்டு சபையில் முன்வைக்கபட்டு சபையால் ஏற்றுக்கொள்ளபட்ட பின்னர் மக்களிடம் வெளிப்படத்தப்படும்.

இந்த அமைப்பு எதிர் காலத்தில் அரசியல் கட்சியாக மாற்றம் பெறுவதற்கான சந்தர்ப்பமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. எமது தேவை அதுவல்ல. பாதிக்கப்பட்டவர்கள் நாம் எமது மக்களின் உழைப்புக்கள், தியாகங்கள், உயிரிழப்புக்கள் வீணகிவிடக்கூடாது. எமது பிரச்சினைகள் அனைத்தையும் நாம் அரசியல்வாதிகளிடம் விட்டுவிட முடியாது. எமக்கான தீர்வை நோக்கிய செயற்பாடுகளை நாம்தான் செய்யவேண்டும். இது முழுக்க முழுக்க தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதாக தான் இருக்கும். தயவு செய்து இந்த அமைப்பிற்கு யாரும் அரசியல் சாயம்பூசாதீர்கள் என்று குறிப்பிட்டார்.

ad

ad