புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

விடுவிக்கப்படவுள்ள காணிகள் குறித்து படையினர் ஆராய்வு – அமைச்சர் சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் அடுத்த வருடம் ஆறாயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசு தீர்மானித்துள்ள நிலையில், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது
என்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்ததன் பின்னரே எந்தெந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்பது தொடர்பாகத் தெளிவாகக் குறிப்பிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சர் சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
ஆறாயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அனுமதி பெறப்பட்டுள்ள போதும், குறிப்பிடுவதைவிட பெருந்தொகையான காணிகள் விடுவிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

ad

ad