புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

இராணுவச் சிப்பாய் சாவு : 22 வருடங்களின் பின் இரு சந்தேகநபர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்னணி இராணுவ காவலரனில் இடம்பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் கடந்த 22 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி விடுதலைப்புலிகளுடனான முன்னணி காவலரண் பகுதியில் இருந்த இராணுவ காலவரண் ஒன்றில் குசும்சிறி என்ற இராணுவ சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த மரணம் தொடர்பில் அவருடைய நேரடி உயரதிகாரிகளான சுமதிபால மற்றும் ஜயசுந்தர ஆகிய இரண்டு இராணுவ கனிஸ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கு நீதிபதி இளஞ்செழியானல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, சந்தேக நபர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தன்று சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணி இந்த வழக்கின் தொகுப்புரையை அரை மணிநேரம் நிகழ்த்தினார்.

அந்தத் தொகுப்புரையில், 
இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது, இறந்தவர், இராணுவ காவலரணுக்குள் நின்ற போது நள்ளிரவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதுடன் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் காவலரணுக்கு வெளியில்; இன்னுமொரு இராணுவ சிப்பாயுடன் தமது துப்பாக்கிகள் சகிதம் நின்றிருந்தனர் என இராணுவ சிப்பாய் ஒருவரின் சாட்சியத்தின்படி நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. 

அத்துடன் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி இறந்துபோன இராணுவ சிப்பாய்க்கு அலுவலக ரீதியாக வழங்கப்பட்ட துப்பாக்கி என்பதும் அவர் இராணுவ காவலரணுக்குள் சென்றபோது அந்தத் துப்பாக்கியைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார் என்பதும் சாட்சியங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 

அதேநேரம் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் வசமிருந்த துப்பாக்கிகள், எதுவும் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் விசாரணையின்போது நிரூபணமாகிய நிலையிலேயே கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு கண்கண்ட சாட்சியும் சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமும் இல்லை எனத் தெரிவித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அவர்களை விடுதலை செய்துள்ளார்.

ad

ad