புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

கள்ளக்காதலி வீட்டில் ஆசிரியர் கொன்று புதைப்பு பட்டதாரி பெண் சிக்கினார்



நெல்லை அருகே கள்ளத்தொடர்பு வைத்திருந்த அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டு, கள்ளக்காதலி வீட்டிலேயே புதைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசில் பட்டதாரி பெண் சிக்கினார்.

அரசு பள்ளி ஆசிரியர் 

கன்னியாகுமரி மாவட்டம் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 36). முதுகலை பட்டதாரி ஆசிரியர். அவருடைய மனைவி அனுஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ், நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அருகே உள்ள ராமச்சந்திரபட்டினம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த 6–ந்தேதி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்தோஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கணவர் மாயமானது குறித்து பாவூர்சத்திரம் போலீசில் அனுஷா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெண் சிக்கினார் 

அப்போது சந்தோஷ் அடிக்கடி ஒரு எண்ணுக்கு போன் செய்து இருப்பதும், மாயமான அன்று கடைசியாக அந்த எண்ணில் அவர் பேசியதும் தெரியவந்தது. அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு போலீசார் பேசிய போது எதிர்முனையில் பேசிய பெண் உடனே போனை சுவிட்ச்–ஆப் செய்துவிட்டார். விசாரணையில் அந்த பெண் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பொன்செல்வி (38) என போலீசார் கண்டறிந்தனர். பொன்செல்வியை நேற்று பிடித்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் பொன்செல்வி அளித்த பரபரப்பான தகவல்கள் வருமாறு:–

நெல்லை மாவட்டம் வெய்க்காலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்செல்வி பட்டதாரி ஆவார். அவருக்கும், தட்டான்குளத்தை சேர்ந்த என்ஜினீயர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத்தினர் கண்டிப்பு 

ராமச்சந்திரபட்டினத்தில் பொன்செல்வியின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அப்போது பக்கத்து வீட்டுக்கு சந்தோஷ் குடிவந்தார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. வெளியூர்களுக்கு சென்று இருவரும் கள்ளக்காதலை வளர்த்துள்ளனர். பொன்செல்வியின் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றது அவர்களுக்கு இன்னும் வசதியாக அமைந்தது.

பின்னர் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகே வீடு கட்டி குழந்தைகளுடன் பொன்செல்வி குடியேறினார். கள்ளக்காதல் விவகாரம் பொன்செல்வியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் கண்டித்ததால் சந்தோஷ் உடனான தொடர்பை கைவிட பொன்செல்வி முடிவு செய்தார். ஆனால், சந்தோஷ் கேட்கவில்லை.

ஆபாச காட்சி 

பொன்செல்வியுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை சந்தோஷ் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும், கள்ளத்தொடர்பை துண்டித்தால் அதனை வெளியில் பரப்பி விடுவேன் என்றும் கூறி மிரட்டி, உல்லாசம் அனுபவித்து வந்தார்.

கணவர் வெளிநாட்டில் இருந்து வர இருந்ததால் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று சந்தோசிடம் பொன்செல்வி கூறியதுடன், போனில் பேச மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் பொன்செல்வியை தேடிவந்து மிரட்டினார். இது பற்றி பொன்செல்வி, தன்னுடைய உறவினர்களிடம் கூறினார்.

விஷ மது கொடுத்தார் 

அதன் பின்னர்தான் சந்தோசை கொன்றுவிட திட்டமிட்டுள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், தண்ணீர் தொட்டி அமைக்கப்போவதாக கூறி, வேலை ஆட்கள் மூலம் குழி தோண்டினர். கடந்த 6–ந்தேதி காலையில் வீட்டுக்கு வருமாறு சந்தோசை போனில் பொன்செல்வி அழைத்தார்.

அவர் வருவதற்கு முன் மதுபாட்டில் வாங்கி அதில் விஷம் கலந்தும் வைத்து இருந்தார். அங்கு வந்த சந்தோஷ் விஷம் கலந்த மதுவை குடித்து மயங்கி விழுந்தார். அதன்பின்பு தன்னுடைய தம்பியை பொன்செல்வி வரவழைத்தார். மயங்கி விழுந்து, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சந்தோசை கொலை செய்து, தோட்டத்தில் தோண்டி வைத்திருந்த குழியில் புதைத்தனர்.

இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை 

இது தொடர்பாக பொன்செல்வி, அவருடைய தம்பி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் மின்வாரிய அதிகாரி ஒருவர் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. நேற்று அந்த அதிகாரியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதற்கிடையே நேற்று மாலையில் பொன்செல்வி வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்டு இருந்த சந்தோஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

ad

ad