புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் எவை...?- JV Breaks வீடியோ

தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது. ஒரு அணி தேர்தல் பிரச்சாரத்திற்கே கிளம்பி விட்டது. இன்னொரு அணி, எங்கள் கூட்டணிக்கு
யார் வந்தாலும் வரவேற்கிறோம் என வெட்கத்தை விட்டு சொல்லியே விட்டது... இந்த தருணத்தில் அ.தி.மு.க வின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் போல் தனித்தே தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறதா....? இல்லை வேல்முருகன், செ.கு. தமிழிரசனை மட்டும் அழைத்துக் கொண்டு கப்பலை செலுத்த தயாராகிவிட்டதா...?. 

பி.ஜே.பியில் ஒரு அணி மற்றும் த.மா.கா, அ.தி.மு.கவுடன் கூட்டு சேர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா...?. ஜெ என்ன நினைக்கிறார்...?


அ.தி.மு.கவுடன் யார் கூட்டணி சேர்வார்கள்...? அ.தி.மு.க வுடன் எந்தப் பெரிய கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொள்ள விருப்பபடவில்லையா...? தன் சாதனைகளைச் சொல்ல 36 நாட்கள் வேண்டும் என ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன...? 

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் JV Breaks வீடியோ மூலம் பதிலளிக்கிறார் ஜுனியர் விகடனின் ப. திருமாவேலன். 

இது போன்ற தேர்தல் களச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள JV Breaks வீடியோக்களை பின்தொடருங்கள்..! 

ad

ad