புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

பல தடைகளுக்களுக்கு அப்பால் தன் திறமையால் தற்போது தன் இலட்சியத்தை அடைந்திருக்கும் ஓர் வீரன் தான் செபமாலைநாயகம் ஞானரூபன்.


தேசிய அணிக் கனவு என்பது ஒவ்வொரு வீரர்களுக்கும் நிச்சயமாக இருக்கின்ற ஒன்றுதான். ஆனாலும் தேசிய அணிக்கு விளையாட தகுதி இருந்தும் பல காரணங்களால்
சிலருக்கு அது நிறைவேறாத கனவாகவே முடிந்து விடுகின்றமை துரதிஸ்ரவசமானது. அவ்வாறு தேசிய அணிக்கனவோடு பயனித்த பல லட்சம் வீரர்களில் பல தடைகளுக்களுக்கு அப்பால் தன் திறமையால் தற்போது தன் இலட்சியத்தை அடைந்திருக்கும் ஓர் வீரன் தான் ஞானம் என்று செல்லமாக அழைக்கப்படும் செபமாலைநாயகம் ஞானரூபன்.
இவரை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிடமுடியாத அளவிற்கு சிறப்புத் திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு காத்திரமான உதைபந்தாட்ட வீரன் தான் ஞானம். முல்லைத்தீவு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை பயின்ற ஞானரூபன் பின் இளவாலை ஹென்றியரசர் கல்லூரியில் உயர்தர கல்வினை தொடர்ந்தார். ஞானரூபன் சிறுவயதில் இருந்தே உதைபந்து மீது தீராக் காதலும் அதீத திறமையும் கொண்ட ஒரு வீரர். பாடசாலை அணி அதனைத் தொடர்ந்து யாழ் மண்ணின் புகழ் பூத்த கழகங்களில் ஒன்றாகிய இளவலை ஹென்றீஸ் அணியின் புகழ்பூத்த நட்சத்திர வீரர் இவர். பல்கலைக்கழக அணி, மாவட்ட அணி, மாகாண அணி, மாவட்ட சிறப்பு அணிகள் என தன் தடங்களை ஒவ்வொரு அணிகளிலும் ஆழமாக பதித்த ஞானரூபன் தன் விளையாட்டுத்திறன் சார் அம்சங்களினால் தமிழ் மக்களின் நீண்ட கால அவவாகிய தேசிய அணிக் கனவை அண்மையில் பூர்த்தி செய்து இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த ஒரு தனித்துவ வீரர்.
ஞானரூபனை பொறுத்தவரை இவரது கோல் போடும் பாங்கும் பந்தை லாவகமாக கொண்டும் செல்லும் பாங்கு என்பவற்றின் ஊடாக தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டிருக்கின்றார். யாழ் பல்கலைக்கழக மாணவனாகிய ஞானரூபன், கடந்த வருடம் யாழ் பல்கலைக் கழகம் ஆனது அனைத்து பல்கலைக் கழகங்கள் இடையேயும் இடம்பெற்ற சுற்றுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள மிக முக்கியமான காரணியாகவும் திகழ்கின்றார். சமகால வடக்கின் முக்கியமான விளையாட்டு ஆளுமைகளில் முக்கியமானவராக கணிக்கப்படுகின்றார்.
அனுராதபுரம் மாவட்ட பிரபல கழகமான சொலிட் விளையாட்டுக் கழகத்தின் வீரராக இருக்கும் ஞானரூபன் அந்த அணியில் இடம்பெற்றுள்ள இதர தனித்துவ ஆளுமைகளாக கொள்ளக் கூடிய வட புலம் நன்கறிந்த எமது யாழ் வீரர்களான பீமா, பிரதீபன், கோபன் மற்றும் இன்னும் சிலருடன் இணைந்து விளையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது இந்த அணி கடந்த வருடம் தேசிய ரீதியாக இடம்பெற்ற போட்டியில் வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அகில பல்கலைகழக 2015 ம் ஆண்டிற்கான சிறந்த வீரரை தெரிவு செய்வதற்கான நடாத்தப்படும் "Most Popular University Sports Star 2015" எனும் போட்டியில் 35.18 வீதமான வாக்குகளை பெற்று, செலுத்தப்பட்ட 15,580 வாக்குகளில், 5481 வாக்குகளை பெற்றுள்ளமை வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இறுதிச் சற்றுக்கு தகுதி பெற்ற 16 வீரர்களில் ஒரே ஒரு தமிழ்வீரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அணிக் கனவு என்பது ஒவ்வொரு வீரர்களுக்கும் நிச்சயமாக இருக்கின்ற ஒன்றுதான் அந்த வகையில் ஞானரூபன் போன்ற தனித்துவ சிறப்பு ஆளுமைகள் இந்த அணியில் இடம்பெற்றிருக்கின்றமை ஒன்றும் ஆச்சரியப்படவோ வியக்கத்தக்கவோ விடயங்கள் இல்லை. ஆனாலும் தேசிய அணியில் எம் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர் ஞானரூபன் என்ற வகையில் அவரை வாழ்த்துவதில் பெருமையடைகிறோம்.
ஞானரூபனுக்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்கள் அனைவரையும் நன்றி சொல்லி எம்மிடம் இருந்து பிரித்து காட்ட வில்லை இருந்தாலும் உங்கள் ஆதரவு இல்லாமல் ஞானரூபன் அவர்கள் நிச்சயமாக வெற்றி பெற முடியாது உங்கள் வாக்கு தான் எம்மை இவ்வளவு தூரம் உயர்த்தியது இதனை நாம் மறக்க முடியாது இந்த வெற்றிக்கு எல்லாருக்கும் பங்கு உண்டு இதனால் எல்லாரும் ஒற்றுமை உடன் உழைத்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

ad

ad