புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

தேமுதிக எம்.எல்.ஏக்களின் இடைநீக்கம் ரத்து : உச்சநீதிமன்றம் தீர்ப்பு


தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை இடைநீக்கம் செய்தது தவறு என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து அவர்களை இடைநீக்கம் செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.  6 எம்.எல்.ஏக்களின் இடைநீக்கத்தையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற தேமுதிக எம்எல்ஏக்கள் சில கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, அவையில் கடும் அமளி நிலவியது.  இதையடுத்து, தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். 

அப்போது, தேமுதிக எம்எல்ஏக்கள் சிலர் அவைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ள்ளனர்.   இதை தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில், அமளியில் ஈடுபட்ட தேமுதிக எம்எல்ஏக்கள் சந்திரக்குமார், மோகன்ராஜ், வெங்கடேசன், பார்த்திபன், சேகர், தினகரன் ஆகிய 6 பேரையும் 2 கூட்டத் தொடருக்கு கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.

 இதற்கு தடை விதிக்கக் கோரி 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஷ்வர், ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிப்ரவரி 19ம் தேதி அவையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்தை பார்வை யிட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.

ad

ad