15 பிப்., 2016

50-வாகனங்கள் குவிந்த பயங்கர விபத்து. மூவர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர் காயம்.

car1
யு.எஸ்.-பென்சில்வேனியாவில் 50-வாகனங்கள் குவிந்த பாரிய மோதல் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன்
பலர் காயமடைந்துள்ளனர்.  கடந்து சென்ற ஒரு பனிப்புயல் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூவர் கொல்லப்பட்டமை உறுதியாக்கப்பட்ட போதிலும் கடுமையாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தெரியவரவில்லை. 70ற்கும் மேற்பட்டவர்கள் அம்புலன்ஸ் மூலம் வேறு இடங்களிற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை 9:45மணியளவில் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50ற்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளன. பனி மூடிய இடைநிலை அளவிலான மூன்று போக்குவரத்து பாதைகளிற்குள் டிரக்டர் டிரெயிலர்கள் பெட்டி லாரிகள் மற்றும் கார்கள் இக்குவியல் மோதலிற்குள் சிக்கியுள்ளன. பிலடெல்பியாவின் 75மைல்கள் வடமேற்கு பகுதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
தனித்திருந்த பயணிகள் பல பேரூந்துகள் மூலம் அருகாமையில் உள்ள வெப்பமயமாதல் மையங்களிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
car car2  car3 car4 car5 car6 car7 car8 car9