15 பிப்., 2016

வட மாகாண புதிய ஆளுநர் சத்தியப் பிரமாணம


வட மாகாண புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
இந்த நியமனம் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், இந்த சத்தியப் பிரமாணம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியராக கடமையாற்றிய ரெஜினோல் குரே, 1988ஆம் ஆண்டு மேல் மாகாண சபை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டு அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார்அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் கடமையாற்றிய ரெஜினோல் குரே, மேல் மாகாண முதலமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
புதிய நியமனத்தை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.