15 பிப்., 2016

மைத்திரி பாவித்த தருப்பு சீட்டு யோசித்த கைது . மகிந்த புதிய கட்சி தொடங்க தயக்கம்


இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதில் மஹிந்த ஆதரவு உறுப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்ஷர்களின் பூரண ஆதரவுடன் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளளார்.
இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால், மஹிந்த அணிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நோக்கத்திலிருந்து விடுவிட்டு, அதற்கு மாற்றீடாக வேறொரு அமைப்பினை உருவாக்கும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிக்குப் பதிலாக திறந்த அரசியல் அமைப்பு எனும் பெயரிலான ஒரு அமைப்பை உருவாக்க கூட்டு எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
புதிய கட்சி உருவாகினால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மஹிந்த அணிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் இணைந்த புதிய கட்சியொன்றை உருவாக்காதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.