-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

15 பிப்., 2016

யாழில் ஆரோக்கியத்துக்கான நடைபயணம்!

வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் 'ஆரோக்கியத்துக்கான நடைபயணம்' எனும் தொனிப்பொருளிலான ஊர்வலம், யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. 

தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த ஊர்வலம், வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் வரை சென்றது. இதில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

விளம்பரம்