புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016

மஹிந்தவுடன் டீல் போடப் போவதில்லை – ஜனாதிபதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் டீல் போடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் கொழும்பு சிங்கள இணையமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுதலை செய்தால் அரசியிலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளுதல் அல்லது வேறும் எந்தவொரு தியாகத்தையும் செய்ய ராஜபக்ச குடும்பம் தயார் என அண்மையில் அந்த தரப்பிற்கு நெருக்கமானவர்கள் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தூது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையும் வகையில் மஹிந்த செயற்பட்டாலும் சட்ட நடவடிக்கை எடுப்பது கைவிடப்படாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்களுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகளில் நீதிமன்றின் மீதோ அல்லது பொலிஸாரின் மீதோ அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை எனவும் சுயாதீனமான முறையில் பணிகளை மேற்கொள்ள அந்த தரப்புக்களுக்கு பூரண சுதந்திரம் அளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியதாக அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்ச தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து மீளவே விரும்புவதாகவும் தமது சகாக்களை பாதுகாக்க விரும்பவில்லை எனவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ad

ad