புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016


யாருடன் கூட்டணி?’ என்பதை 20-ஆம் தேதி தே.மு.தி.க. மாநாட்டில்  கேப்டன் அறிவிப்பார் என்னும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
கட்சியின் நிர்வாகிகள் பலரும் தி.மு.க கூட்டணியை விரும்பினாலும், விஜயகாந்த் குடும்பத்தினரிடம் பா.ஜ.க கரிசனம் நன்றாகவே தெரிகிறது என்கிறார்கள் நிலவரம் அறிந்தவர்கள்.

பிரேமலதாவிடம் பா.ஜ.க டெல்லி மேலிடப் பிரதிநிதிகள் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தே.மு.தி.க கூட்டணிக்காக விஜய காந்த்தை நேரில் சந்திக்க பல முறை முயன்று, கடைசியாக போனில் பேசியிருக்கிறார்.
""மோடி, அமித்ஷா எல்லோரும் உங்களுடனான கூட் டணியைத்ததான் விரும்பு கிறார்கள். தேர்தலில் அ.தி.மு.க என்ன வேலை செய்யத் திட்டமிட்டுள்ளதோ அதே வேலையை நாம் பார்க்கலாம். நமக்கும் அதற்கான பலம் உள்ளது. பார்லி மெண்ட் தேர்தலைவிட இருமடங்கு மதிப்பும் மரியாதையும் உங்களுக்குக் கொடுப்போம்'' என்று பேசியிருக்கிறார் பிரகாஷ் ஜவடேகர். விஜயகாந்த் வழக்கம்போல பிடி கொடுக்கா மல் பதிலளித்திருக் கிறார்.



இந்தப் பேச் சுக்குப்பிறகு அ.தி. மு.க.வின் முன் னாள் பாசறை பொறுப்பாளர் டாக்டர் வெங்க டேசன், ஜவடே கரிடம் பேசியுள்ளார். அரசியல் நிலவரம் குறித்துப் பேசப்பட்டதாம். பா.ஜ.க அணிக்கு தே.மு.தி.க கொண்டு வரப்பட் டால், பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் 10 தொகுதிகளில் அ.தி.மு.க சாதகமாக நடந்துகொள்ளும் என்றும் அரசியல் உயர்மட்டங்களில் பேசப்படுகிறது.
அதே நேரத்தில் மக்கள் நலக்கூட்டணி தரப்பிலான தொடர்புகளும் தொடர்கின்றன. 4 தலைவர்களிடமும் விஜயகாந்த் பிடிகொடுக்காததால், சமுதாயப் பிரமுகர் ஒருவர் தொடர்பில் இருக்கிறார். அ.தி.மு.க தரப்புக்கும் அவர் நெருக்கமானவராம். கூட்டணி அரசியலின் மையப்புள்ளியாக தே.மு.தி.க.வை நிலைநிறுத்தியதில் உள்ளூர சந்தோஷப்படும் விஜயகாந்த், தனது அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு எப்போதும் நாடும், மதுரை திருமங்கலத்தையடுத்த காங்கேய நத்தத்தில் தனது குல தெய்வமான வீரச் சின்னம்மாளையும், இஷ்ட தெய்வமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும் பிப்ரவரி 16-ந் தேதி மனைவியுடன் சென்று வழிபட்டார்.
ஆண்டாள் பிறந்த செவ்வாய்க்கிழமையில் அரக்கு நிறப் புடவை, கற்கண்டு சாதத்துடன், 1008 தாமரை கொண்டு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் ‘நினைத்தது நிறைவேறி வெற்றி கிடைக்கும்..’ என்று அவரது நம்பிக்கைக்குரிய வாஸ்து நிபுணர் ஆண்டாள் சொக்கலிங்கம் எடுத்துச் சொல்ல, அவரையும் அழைத்துக் கொண்டு, குறித்துக் கொடுத்த நல்ல நேரத்தில், மாலை 4.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் கால் பதித்தார்.
கோயில் திருப்பணிக்காக 105 கிராம் தங்கம் ஏற்கனவே கொடுத்திருந்தார் விஜயகாந்த். அவர் கோவிலுக்கு வரும் நேரத்தில், ஜே.சி.பி இயந்திரம் மூலம் யாகசாலை மண்சுவர்களை இடிக்க உத்தரவிடப்பட்டதால், கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்கு செல்ல முடியாமல், தெற்கு திசையில் எப்போதும் பூட்டப்பட்டிருக்கும் குறுகலான கிரில் கேட் வழியாக விஜயகாந்த் வர வேண்டிய நிலை ஏற்பட்டது.  தனது வலது கையால், மனைவி பிரேமலதாவின் இடது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, இடது கையால் வேட்டியின் ஒரு பகுதியை சற்று தூக்கிப்...

ad

ad