புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 பிப்., 2016

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் கைதுகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மளிகை கடைக்காரர்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜார்லிங் ஜபா (வயது 38). இவரது மனைவி பேபி சோபியா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வந்த
அந்தோணி அங்கு மளிகைக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். சிதம்பரத்திலேயே வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர்களுடன் அந்தோணியின் தாய் ராஜரீகமேரியும் (68) தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை அந்தோணி வழக்கம்போல் கடைக்கு சென்றுவிட்டார். காலை 9 மணியளவில் பேபி சோபியா, செல்போனில் தனது கணவர் அந்தோணியை தொடர்பு கொண்டு, ‘உங்கள் அம்மா கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார். உடனே வாருங்கள்’ என்றார்.
மருமகள் மீது சந்தேகம்இதனால் அந்தோணி பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, தனது தாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜரீகமேரியின் மூக்கு, வாய் பகுதியில் ரத்தக்காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த அவர், உடனே இதுபற்றி சிதம்பரம் நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவத்தின்போது வீட்டில் பேபி சோபியா மட்டும் தனியாக இருந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில், மாமியார் ராஜரீகமேரியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
கள்ளக்காதல்போலீசார் கொலை வழக்காக மாற்றி, பேபிசோபியாவை கைது செய்தனர். போலீசாரிடம் பேபி சோபியா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
எனது கணவர் தினமும் காலை 7 மணிக்கு கடைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வருவார். அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்தோணி கடைக்கு சென்றதும் அந்த வாலிபரை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்தோம். இதுபற்றி அறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். இருப்பினும் நான் அந்த வாலிபருடனான பழக்கத்தை விடவில்லை.
மாமியார் கண்காணித்தார்இதனால் என்னை கண்காணிக்க 6 மாதங்களுக்கு முன்பு தனது தாயை ஊரில் இருந்து அழைத்துவந்தார். அப்போது ராஜரீகமேரி அந்த வாலிபர் வீட்டுக்கு வந்து செல்வதை எனது கணவரிடம் கூறினார். இதனால் எனது கணவர் என்மீது கோபம் அடைந்து திட்டினார்.
என்னைப்பற்றி எனது கணவரிடம் கூறியதாலும், எனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் ராஜரீகமேரியை தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். அப்போதும் ஆத்திரம் தீராமல் அவரது முகத்தில் தாக்கினேன். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.