புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016

தேமுதிக எங்களோடு இணையும்: வைகோ பேட்டி

மக்கள் நலக் கூட்டணியின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் கோவையில் தொடங்கி, திண்டுக்கல்லில் முடிவடைகிறது. நேற்று கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், திருப்பூர் சுப்பராயன், ஆகியோர் இன்று இரண்டாம் நாளாக ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

இன்று காலை 11 மணி அளவில் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் சுப்பராயன், விவசாயிகள், நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்கிற இந்த மண்ணில் பிரிவிணைவாதம் என்கிற பெயரில் சாதிய மோதல்களுக்கு தூண்டும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளது. 

வைகோ பேசுகையில், சங்ககால இதிகாச கதைகளில் வருகின்ற ஒரு காட்சி, கடுமையான வெயில் பற்றிய ஒரு காட்சி. அந்த வெயிலில் ஒரு நாகப்பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் இல்லை. அந்த நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுகிறது. அதே சமயத்தில் ஒரு தவளை, நிழல் தேடி சுற்றுகிறது. அப்போது நிழல் தெரிந்து அந்த நிழலுக்கு ஓடுகிறது. அந்த நிழல் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடும் நிழல். இப்போது நாகப்பாம்பு தவளையை சாம்பிடுமா என்பதுதான் பிரச்சனை. இதில் நாகப்பாம்பு, தவளை என்பது திமுக காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணி என்றார். 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வைகோ, தேமுதிக மாநாட்டில் அதிமுக, திமுகவை ஊழல் கட்சிகள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக எங்களோடு இணையும் என்று நம்புகிறோம் என்றார். 

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் இன்று மாலை மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 

ad

ad