புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2016

முறைதவறி விமானங்களை செலுத்தியமைகறுப்புப்பட்டியலில் உள்வாங்கப்படும் இலங்கை விமானசேவை

சர்வதேச விமானசேவைகள் அமைப்பினால் இலங்கையின் விமான சேவை ஒன்று கறுப்புப் பட்டியலிடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொது விமானசேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி நிமலஸ்ரீ இதனை தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால் நிர்வகிக்கப்படும் மிஹின் எயார் விமானங்கள், 2015ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் திகதி முதல் செப்டம்பர் மூன்றாம் திகதி வரை தொடர்ச்சியாக பறப்பு மீறல்களில் ஈடுபட்டதாக பாங்ஹொக்கை தலைமையகமாக கொண்ட சர்வதேச சிவில் விமானசேவை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு அந்த அமைப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் 42 பக்க அறிக்கை ஒன்றின்மூலம் விளக்கம் கோரியுள்ளது.
மிஹின் எயார் விமானிகள் பலர் முறைதவறி விமானங்களை செலுத்தியமை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள முக்கிய மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இலங்கையின் சிவில் விமானசேவை அதிகாரசபை உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றும் சர்வதேச விமான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ad

ad