புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2016

கேப்டனை அழிக்க ஜெயலலிதா ஏவிய ஏவுகணை வைகோ...!' -அசரடிக்கும் தே.மு.தி.க எம்.எல்.ஏ



தே.மு.தி.கவில் இருந்து மூன்று எம்.எல்.ஏக்கள், நான்கு மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்ததையடு
த்து, அவர்களை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் விஜயகாந்த். 'நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க' என தனியாக கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது அதிருப்தி அணி. 

இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களை இணைக்கும் வகையில் பிரமாண்ட திருமண மண்டபத்தைத் தேடி வருகிறார்கள். கேப்டனுக்கு சவால்விடும் வகையில் பெரும் எண்ணிக்கையில் கூட்டத்தைக் கூட்டவும் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
' அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?' என்ற கேள்வியை மேட்டூர் எம்.எல்.ஏ பார்த்திபனிடம் கேட்டோம். 

"எங்களை நீக்கியது கட்சியின் சட்டப்படி செல்லாது. நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிக் காட்டுகிறோம். ஆனால், சம்பந்தமில்லாமல் வைகோ எங்களை அவதூறாக பேசுகிறார். வைகோவின் பேச்சை ஒவ்வொரு தே.மு.தி.க தொண்டனும் வெறுக்கிறான். ஜெயலலிதா அரசால் ஏவப்பட்ட ஏவுகணை இந்த வைகோ. அது தே.மு.தி.கவை அழிக்க வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏவுகணையை நடுவானில் நிறுத்தி சிதறடிக்கவில்லையென்றால் தே.மு.தி.க சிதறிவிடும். கேப்டன் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டிய காலகட்டம் இது. கேப்டனையும் காப்பாற்ற வேண்டும். கேப்டன் தொண்டனையும் காப்பாற்ற வேண்டும். அந்த மனநிலையில்தான் இருக்கிறோம். எங்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி எல்லாம் வேண்டாம். அதற்காக அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்". 

உங்களைத்தான் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்களே? பிறகு எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள்? 

" நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். உயர்மட்டக் குழுவில் இருக்கிறோம். பொதுக்குழுவுக்குத்தான் எங்களை நீக்கும் அதிகாரம் உண்டு. அவர்கள் கூடி ஏக மனதாக முடிவை அறிவிக்க வேண்டும். எங்களுக்கு எந்த ஷோகாஸ் நோட்டீஸும் தலைமை கொடுக்கவில்லை. தலைவர் எங்களை நீக்கியது தவறு".


அப்படியே இருந்தாலும், மீண்டும் நீங்கள் கட்சியில் இணைந்து வேலை பார்க்க முடியும் என நம்புகிறீர்களா? 


" எங்களையே நாங்கள் தியாகம் செய்து கொண்டு, அழித்துக் கொண்டு கட்சியைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். உள்ளே நுழைந்தால் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதை முறியடிப்போம். கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனிப்பட்ட சந்திரகுமாரோ, தனிப்பட்ட பார்த்திபனோ வைக்கவில்லை. ஒட்டுமொத்த தொண்டர்களும்தான் கோரிக்கை வைக்கிறார்கள். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அனைவரின் மனநிலையை நாங்கள் பிரதிபலிக்கிறோம். கட்சியில் ஜனநாயகம் என்ற கதவே திறந்தே இருக்கிறது". 

ஜனநாயகக் கதவைத் திறக்க சட்டரீதியான முயற்சிகளை எடுப்பீர்களா? 

" சட்டரீதியாக போராடுவதைவிட, எங்கள் கோரிக்கையை கேப்டனிடம் வலியுறுத்திக் கொண்டே இருப்போம். எங்கள் அடுத்தகட்ட முடிவை இன்று அறிவிப்போம். ஆனால், எந்தக் கட்சியிலும் சேர மாட்டோம்". 


உங்களை இயக்குவது ஸ்டாலின் என்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார்களே? 


"அது அபாண்டமான குற்றச்சாட்டு. மலிவான அரசியல் நடத்துவதற்காக வைகோ போன்றவர்கள் கிளப்பும் வதந்தி. இதையெல்லாம் தே.மு.தி.க தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்".

ad

ad