புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2016

திருமாவளவனை முன்னிறுத்தும் தேமுதிக பிளவு! - இப்படியும் ஒரு பின்னணியா?

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்ததற்கு எதிர்ப்பு குரல் எழுப்பி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சந்திரகுமார்
, பார்த்திபன் உள்ளிட்ட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவாளர்கள், திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கான பின்னணி என்ன என்பதற்கான சில காரணங்கள் வெளியே கசிந்துள்ளது.
"தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், எங்களால் ஓட்டு கேட்டு வாக்காளர்களை சந்திக்க முடியாது" என்ற கருத்துகளை தங்களின் ஆதரவாளர்கள் மத்தியில் சமீப நாட்களாக பேசி வந்த அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இன்று விஜயகாந்த்திற்கு எதிராக வெளியே வந்துள்ளனர்.

"தேமுதிக எப்போதும் சாதிப் பாகுபாடு பார்த்ததில்லை. நானும் சாதிப் பார்த்து பழகியதில்லை"  என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மேடைக்கு மேடை  உறுதியளித்து வந்தார். இதை அவர் நடைமுறையிலும் காட்டி வந்தார். இது யாருக்கு புரிந்ததோ இல்லையோ பாமகவிற்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் இதற்கு பதிலடியாக எதுவும் செய்ய முடியாமல் அவ்வப்போது விஜயகாந்தை கடுமையாக விமர்சிக்க மட்டும் செய்யும் பாமக தரப்பு.
தேமுதிக வருகை,  தமிழகத்தின் வடமாவட்டங்களில் பாமக செல்வாக்கை கடுமையாக சரித்தது என்பது அரசியல்  அவதானிப்பாளர்களின் இறுதி முடிவு. அதை உறுதி செய்யும் வகையில் பாமக பலமாக உள்ள மாவட்டமாக அவர்களால் கூறப்பட்டு வரும்  சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் தேமுதிக,  கடந்த  சட்டமன்றத் தேர்தலில் அதிரடியாக வெற்றியை குவித்தது. 

அதில் ஒரு தொகுதி எம்.எல்.ஏ.தான் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர்.பார்த்திபன். இவர் இன்று தேமுதிக தலைவர் மீதும்,  மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்ததது  குறித்தும் பல்வேறு கடுமையான விமர்சனங்களை செய்தியாளர்கள் முன்பு வைத்தார். அதற்கு முன்னதாக சேலம் மாவட்டத்தில் இந்தத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தாம் எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்தும் தனது ஆதரவாளர்களோடு கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். 

அப்போது பார்த்திபன், "தேமுதிக தலைமை,  மக்கள் நலக் கூட்டணியோடு எப்படி தேர்தல் கூட்டணி வைக்கலாம்? அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் ஆகாது.  மேலும், திருமாவளனுக்காக அவர் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்காக என்னால்  எப்படி ஓட்டு கேட்டு செல்லமுடியும்?  அதனால் என்னால் தேர்தல் வேலை செய்ய முடியாது. இந்த நிலையில் ஏன் நாம் திமுக பக்கம் செல்லக் கூடாது. அவர்களும் அழைக்கிறார்கள்" என்று கூறியதாக சேலம் தேமுதிக  நிர்வாகிகள் மட்டத்திலிருந்து கசிந்த தகவல் தெரிவிக்கிறது. 
]
அவரது இந்த நிலைப்பாட்டுக்கு, சேலம் தேமுதிக மட்டத்திலேயே தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேமுதிக - மக்கள் நலக்  கூட்டணியில் இருக்கும் சமத்துவ பார்வைகளை புறந்தள்ளிவிட்டு செயல்படும்  எம்.எல்.ஏ. பார்த்திபன், கட்சிக்குத் தேவை இல்லை என்றும், அவர் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவருக்கு எதிராக தீவிரப் பிரசாரம் செய்து தோற்கடிப்பது என்றும் சேலம் மாவட்ட தேமுதிகவினர்  முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,செய்தியாளர்கள் மத்தியில் தலைமையைக் கடுமையாக விமர்சித்தும், திமுகதான் ஆட்சி அமைக்கும் என்றும் உறுதியாகப்  பேசிய எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என்று மொத்தமாக 10 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விஜயகாந்த் நீக்கியுள்ளார். இதில் சந்திரகுமார் மற்றும் சேகர் உள்ளிட்டோரும், பார்த்திபன் நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் திமுகவில் சேர்ந்தால் அது எத்தகைய விமர்சனங்களை எழுப்புமோ என்று தெரியவில்லை.திருமாவளவனை முன்னிறுத்தும் தேமுதிக பிளவு! - இப்படியும் ஒரு பின்னணியா?

ad

ad