5 மே, 2016

இலவச கைப்பேசி; விவசாய கடன் தள்ளுபடி: அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!

ரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை
முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். முதல் பிரதியை தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்துக்காக தனித் தனியாக தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 2016-2021 வரை ரூ.40 ஆயிரம் பயிர் கடன் வழங்கப்படும்
* காவிரி நடுவர் மன்ற இறுதித்திர்ப்பை முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை
* விவவசாயிகள்ன் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்
* விவசாயகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
* முல்லைப்பெரியாறு நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது
* அவிநாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்
* வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்
* மீனவர் நிவாரணத் தொகை ரூ5 ஆயிரமாக உயர்த்தப்படும்
* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்
* மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும்
* உள்நாட்டு மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
* மீன்பதனப் பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்
* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை
* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க திட்டம்
* மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி
* மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்
* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் இல்லை
* வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும்
* ஸ்கூட்டர் வாங்க மகளிருக்கு 50% மானியம் வழங்கப்படும்
* அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஏழை, எளிய மக்களுக்கு அம்மா பேங்கிக் கார்டு வழங்கப்படும்
* பொங்கல் திரநாளன்று கோஆப் டெக்ஸ் துணிகள் வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்படும்
* அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் கைப்பேசி இலவசம்
* பொது இடங்களில் இலவச வைபை அமைக்கப்படும்