புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2016

அன்பில் கிராம போராட்டம் : மனைவிமார்கள் கைது - கணவன்மார்கள் அதிர்ச்சி ( படங்கள் )


திருச்சி லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் இன்று மக்கள் அதிகாரம் அமைப்பினருடன் அன்பில் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை மூட சொல்லி இன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். 
 
இதனால் 300 போலீசாருக்கு மேல் டாஸ்மார்க் கடை செல்லும் வழியில் வாகன போக்குவரத்தை நிறுத்தி பேராட்டத்திற்கு செல்லும் மக்களை தடுத்து நிறுத்தினார்கள். 

இதையும் மீறி அன்பில் கிராமத்திலிருந்து சாரை சாரையாக மக்கள் வந்தனர்.  எங்கள் வீட்டு ஆம்பிளைங்க எல்லாம் குடித்து சாப்பாடு எதுன்னு தெரியில்ல, சம்சாரம் எது பெத்த தாய் யாருன்னு தெரியல்ல, ஏன் பெத்த பொண்ணு கூட கண்ணுக்கு தெரியல்ல, இது ஒரு எல்லை மீறி சென்று விட்டது.  இனி இந்த கடை எங்கள் ஊருக்குள் வேண்டாம் என்று கொதிப்புடன் அனைத்து பெண்களும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர். 

இதற்கு இடையில் மக்கள் அதிகாரம் அமைப்பை  சேர்ந்த  மக்கள் பாடகர் கோவன், தர்மராஜ், சரவணன், மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்த சின்னதுரை இவர்களோடு மக்கள் கலைஇலக்கிய கழகத்தின் கலைக்குழுவினர் மக்களுக்கு விழிப்புணர்வு பாடலை பாடிக்கொண்டிருந்தனர். 

லால்குடி தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கடையை மூடும் வரைக்கும் நாங்கள் இங்கே இருந்து கலைந்து செல்லமாட்டோம் என்றும் அதிகாரிகளிடம் நீங்கள்  பேசி கடையை மூடுங்கள் என்று கோஷம் போட்டனர். 

மீண்டும் தாசில்தார் ஜெயக்குமார்,  மேல் அதிகாரிகளிடம் அன்பில் மக்கள் இந்த டாஸ்மார்க் கடை வேண்டாம் என்று தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கிறார்கள் என்று தகவல் சொல்லிவிட்டேன். இன்னும் 3 நாட்களுக்குள் முடிவு செய்கிறோம் என்று உறுதி கொடுத்தனர். 

ஆனாலும் போராட்ட குழுவினார் இப்போது மூடியிருக்கும் கடை இனி திறக்க கூடாது. ஒரு வேலை திறந்தால் மீண்டும் எங்கள் பேராட்டம் தொடரும் என்றும், நாங்கள் கோஷங்கள் எழுப்பி கைதாகிறோம் என்றும் எங்களை காவல்துறையினர் தொடக்கூடாது என்றும் வழக்கறிஞர்கள் போலிஸாருக்கு எச்சரிக்கை விட அந்த கிராம மக்கள் ஒவ்வொருவரும் டாஸ்மாக் எதிராக கோஷம் போட்டுக்கொண்டே கைதானர்கள். 

தங்கள் மனைவிமார்கள் டாஸ்மாக் போராட்டத்தில் கைதாகி செல்வதை அதிர்ச்சியுடன் அன்பில் கணவன்மார்கள் பாத்துக்கொண்டேயிருந்தனர். 

ad

ad