புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2016

திருமாவைத் தோற்கடிக்க தி.மு.க வியூகம்


காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவைத் தோற்கடிக்க தி.மு.க நிர்வாகிகள் செய்யும் உள்ளடிகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். 'பா.ம.கவினரோடு சேர்ந்து கொண்டு தி.மு.க நிர்வாகிகள் சதி வேலை செய்வதாகவும்' குற்றம் சாட்டுகின்றனர். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் விருப்ப தொகுதியான காட்டுமன்னார் கோவிலில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அ.தி.மு.கவின் முருகுமாறனும் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிரத்னமும் போட்டியிடுகின்றனர். எம்.பி தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமா, அதிகப்படியான ஓட்டுக்கள் வாங்கியதும் காட்டுமன்னார் கோவிலில்தான். தொகுதியின் 1,55,701 வாக்குகளில் திருமா வாங்கியது மட்டும் 58,294 ஓட்டுகள். இவரை எதிர்த்து வென்ற அ.தி.மு.கவின் சந்திரகாசியோ 49,604 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அந்தளவுக்கு திருமா மீது தொகுதி முழுக்க பாசம் பொங்கி வழிகிறது. ஆனால், 'திருமாவைக் காரணம் காட்டி பா.ம.க தொகுதிகளில் தி.மு.க நிர்வாகிகள் போட்டிருக்கும் திட்டம் அதிர வைக்கிறது' என்கின்றனர் வி.சி.க தொண்டர்கள் சிலர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர், " நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, பா.ம.க, பா.ஜ.க எனக் கூட்டு சேர்ந்துகூட மூன்றாவது இடம்தான் வர முடிந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க ஓட்டுக்கள் அனைத்தும் திருமா பக்கம் வந்தது. இப்போது திருமாவும் தே.மு.தி.கவும் ஒரே அணியாகிவிட்டார்கள். விஜயகாந்த் ஓட்டு திருமாவுக்கு பிளஸ் என்றாலும், 'தொகுதிக்குள் பரவலாக இருக்கும் பா.ம.க ஓட்டுக்களை தங்கள் பக்கம் குவித்தால் எளிதாக வெற்றி பெறலாம்' என்பதற்காக, காங்கிரஸின் மணிரத்னத்திற்கு ஆதரவாக தி.மு.க நிர்வாகிகள் செயல்படுகிறார்கள். திருமாவை எதிர்ப்பதன் மூலம், வன்னியர் வாக்குகளை எளிதாக பெற்றுவிடலாம் என்பது அவர்களின் கணக்கு.
ட்டு கேட்கச் செல்லும் கிராமங்களில், சமுதாயத் தலைவர்களிடம் பேசும் தி.மு.க நிர்வாகிகள், ' நமக்காக தி.மு.க தலைவர் நிறைய நல்ல காரியங்களை செய்து கொடுத்திருக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி உள்பட நிறைய பதவிகளும் கிடைத்தது. ஆனால், உங்கள் அய்யாவை சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. சித்திரை பவுர்ணமி விழாவுக்குக் கூட அனுமதி மறுத்தார்கள். எங்களை வைத்துத்தான் திருமா ஓட்டுக்களை வாரிக் குவித்தார். அவரால் எங்கள் வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை. அதனால்தான் கூட்டணியில் இருந்து அவரைக் கழட்டிவிட்டோம். இந்தமுறை எங்கள் கூட்டணியில் போட்டியிடும் மணிரத்னத்தை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்' எனப் பிரசாரம் செய்கின்றனர். இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எல்லா சமுதாயங்களுக்குமான தலைவராகத்தான் திருமா தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். 

இதில், காங்கிரஸின் மணிரத்னம் எம்.பி தேர்தலில் பா.ம.க சார்பில் போட்டியிட்டவர். பணபலம் மிக்கவர் என்பதால் பா.ம.க நிர்வாகிகளிடையே நல்ல அறிமுகத்தில் இருக்கிறார். 'திருமாவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், மணிரத்னத்திற்கு ஓட்டுப் போட்டால் மட்டுமே முடியும்'  என பிரசாரத்தை தீவிரமாக்கியுள்ளனர். இதற்காக, உள்ளூர் பா.ம.க நிர்வாகிகளும் தி.மு.க நிர்வாகிகளும் மறைமுகமாக கை கோர்த்துள்ளனர். 'எங்கள் கூட்டணியில் திருமா இல்லை' என்ற கோஷத்தை வலுவாக்குவதன் மூலம் பிற தொகுதிகளில் உள்ள வன்னியர் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. மக்கள் நலக் கூட்டணி பலம், சொந்தக் கட்சி செல்வாக்கு, தொண்டர் பலம் என மூன்றை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார் திருமா. அ.தி.மு.கவின் முருகுமாறனோ, 'திருமாவைத் தோற்கடிச்சாலே அம்மா எனக்கு மந்திரி பதவி தருவார்' எனப் பிரசாரம் செய்கிறார். பிரதான கட்சிகளின் பணபலத்தையும் தாண்டி காட்டுமன்னார்கோவிலில் திருமா தீவிர பிரசாரம் செய்கிறார்" என்றார் களநிலவரத்தைப் பிரதிபலித்தபடி. 

'நெருக்கடியான காலகட்டத்தில்கூட எம்.பி தேர்தலில் திருமாவுக்கு முதலிடம் கொடுத்தார்கள் காட்டுமன்னார்கோவில் வாக்காளர்கள். இந்தமுறை அவ்வளவு எளிதில் அவரைக் கைவிட மாட்டார்கள்' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள். 

ad

ad