5 மே, 2016

ஐரோப்பியத் தமிழர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படுவார்களா?

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாளை(May 5) மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் Sadiq Khan(Labour), Zac Goldsmith (Conservative) , Sian Berry (Green Party), Caroline Pidgeon (Liberal Democrat) உட்பட மொத்தம் ஏழு பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் Supplementary Vote System என்னும் முறை பயன்படுத்தப்படவுள்ளது, இதனை பொறுத்தவரையில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் குறைந்தது 50சதவிகித வாக்குகளை பெறவேண்டும்.
லண்டன் மேயருக்கான அதிகாரங்களில் முக்கிய இடம்பிடிப்பது வீட்டு வசதி வாரியம், போக்குவரத்து மற்றும் சுகாதாரம்.
இதனை மேம்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியும் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால் ஐரோப்பிய பிரஜைகள் கண்டிப்பாக பிரித்தானியாவை விட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும், அதே போன்று வேறு ஐரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானிய பிரஜைகள் மீண்டும் பிரித்தானியா திரும்ப வேண்டி வரும்.