யாழ்ப்பாணதத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளம்பெண் தொடர்பான தகவ
ல்களை உடனடியாக வழங்குமாறு
பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியுள்ளனர்.
ல்களை உடனடியாக வழங்குமாறு
பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியுள்ளனர்.
சுமார் 22 வயது மதிக்கத்தக்க சொந்த முகவரி அற்ற குறித்த பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு இலட்சத்திற்கு அதிகமான பணம்,நகைகளை கொள்ளையிட்டு மறைந்து வாழ்வதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போது கொழும்பு புறநகர் பகுதியில் நடமாடி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தேக நபரான தேனுகா ரவீந்திரன்(வயது22) என்பவர் பல இளைஞர்களை தொடர்புகொண்டு பல இலட்சங்களை திருடி தலைமறைவானார்.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0212240323 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.