புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

100-வயது தாயார் இறந்த துக்கத்தில் 66-வயது மகன் தற்கொலை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில், நேற்று மாலை, அந்தியூர் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அணைக்கு மேற்க்கே 300-அடி தூரத்தில், ஒரு மரத்தில் ஆண் சடலம் தூக்கில் தொங்கியது.

இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த சடலத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார் என்பது அடையாளம் தெரியாத நிலையில், சடலத்தை பாதுகாப்பாக வைக்கும் நோக்கில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சடலம் ஏற்பட்டது.

அப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜோதிமணி என்ற நெசவு செய்யும் தொழிலாளி ஒருவர், தற்கொலை செய்த நபர் பயன்படுத்திய லுங்கியை பார்த்து, இது நான் நெய்த லுங்கி என கூறினார்.

இதை வைத்து போலீசார் நெசவு கூட உரிமையாளர் மூலம் விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்து கொண்டவர் அந்தியூர் பனங்காட்டூரை சேர்ந்த பொம்மநாயக்கர்(வயது-66). என்பது தெரிந்தது.
அவர் மனைவி ராணி என்பவரை வரவழைத்து இதை உறுதி செய்து கொண்டனர். பொம்மநாயக்கரின், 100 வயது தாயார் சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த ஏக்கத்தில் பொம்மநாயக்கர் இருந்துள்ளார். இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணை பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலில்பூச்சி மருந்து குடித்த அவர், ஒருவேளை பிழைத்துக் கொள்வோம் என பயந்து, மீண்டும் மரத்தில் தூக்கிட்டு கொண்டதும் தெரிய வந்தது.

ad

ad