புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க பொருத்தமான செயற்பாடு அவசியம்: ஐ.நா

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட பொருத்தமான வரிசைக்கிரமமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 301 என்ற பிரேரணையை அமுல்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில் இலங்கை அரசாங்கம் பரந்த உபாய மார்க்கத்தை வெளிக்காட்ட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரில் ஆரம்ப உரையை நிகழ்த்துகையிலேயே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையாளர் வலியுறுத்தியதுடன், நீதி நிர்வாக செயற்பாடுகள் நீதியான முறையிலும், பக்கசார்பற்ற வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் என்பன உறுதிப்படுத்தப்படுவதுடன், இதனூடாக சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.

நேற்று ஆரம்பமான குறித்த கூட்டத்தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad