புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்



தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர் தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதல்-மந்திரி யாக  பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசுவது மரபாக உள்ளது.

அந்த வகையில் முதல்- அமைச்சர்  ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டு சென் றார். போயஸ்கார்டன் இல்லத் தில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்ட அவர் 11 மணிக்கு தனி விமா னத்தில் டெல்லி சென்றார். அவருடன் தமிழக அரசின் தலைமைச்  செயலாளர் பி.ராமமோகனராவ், நிதித் துறை செயலாளர் சண்முகம் ஆகியோரும் சென்றனர்.

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் விமானம் மதியம் டெல்லி விமான நிலை யத்தை  சென்றடைகிறது. அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அ.தி. மு.க. எம்.பி.க்கள் 50 பேரும் விமான நிலையத் துக்கு வருகை தந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கின்றனர்.

இதையடுத்து முதல்- அமைச்சர்  ஜெயலலிதா விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சுமார் 2 மணி நேரம் தங்கி இருக்க உள்ளார்.
அப்போது மத்திய மந்திரிகள் சிலர் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளனர். அவர்களிடம் தமிழக திட்டங்களுக்கு உதவும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுப்பார்.

மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில்  உள்ள பிரதமரின் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.பிரதமர் மோடியும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவும் சுமார் 50 நிமிடங்கள் பேசு வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சின்போது தமிழக திட்டங்கள் குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வலி யுறுத்துவார்.

பிரதமரை சந்திக்கும் போது அவரிடம் 36 கோரிக்கைகள் அடங்கிய 32 பக்க கோரிக்கை மனுவை கொடுக்கவும் முதல் -அமைச் சர் ஜெயலலிதா திட்டமிட் டுள்ளார். பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளுடனான சந்திப்பு முடிந்த பிறகு டெல்லியில் இருந்து இன்றிரவு 7 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனி விமா னத்தில் புறப்படுகிறார். இரவு 9.30 மணியளவில் அவர் சென்னை வந்து சேருவார்.

ad

ad