புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2016

சுவிஸில் காணாமல் போன 12 வயது சிறுவன் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு


சுவிற்சர்லாந்து நாட்டில் காணாமல்போன 12 வயது சிறுவன் 8 நாட்களுக்கு பிறகு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள சொலூதுர்ன் நகரில் 12 வயதான பவுல் என்ற சிறுவன் கடந்த 18ம் திகதி விளையாட செல்வதாக பெற்றோருடன் கூறி விட்டு சென்றுள்ளான்.
ஆனால், அன்று இரவு வரை சிறுவன் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற பொலிஸார் சிறுவனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். சிறுவன் பயன்படுத்திய சைக்கிள் ஒன்று கடந்த 21ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சிறுவன் தற்போது ஜேர்மனியில் உள்ள Dusseldorf என்ற நகரில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மன் அதிகாரிகளின் உதவியுடன் சுவிஸ் அதிகாரிகள் Dusseldorf நகருக்கு சென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடியிருப்பு ஒன்றை சோதனை செய்தபோது அங்கு காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனுடன் 35 வயதான நபர் ஒருவரும் தங்கியுள்ளார். இருவரும் கணணியில் ஹேம் விளையாடிக்கொண்டு இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இணையத்தளம் மூலமாக இருவரும் சந்தித்துக்கொண்டதை தொடர்ந்து தற்போது நேரடியாக சந்தித்துள்ளனர்.
எனினும், சிறுவன் தனது விருப்பத்தின் பேரில் தான் ஜேர்மனிக்கு வந்தானா? அல்லது கடத்தப்பட்டானா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad