புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2016

மீண்டும் விஷம் கக்குகின்றார் ஞானசார தேரர்

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார @தரர் மீண்டும் அச் சத்தை விதைக்கின்றார். முன்னைய அர சின் வீழ்ச்சியுடன் மறைந்திருந்த அந்தக்
கோரமுகம் மீண்டும் மூர்க்கம் கொண்டு விஷத்தை கக்குகின்றது.
மஹியங்கனையில் ஞானசார தேரர் தெரிவித்த விடயங்களை அவரது தனிப்பட்ட கருத்து என்றோ அல்லது கருத்துச்சுதந்திரம் என்றோ அலட்சியம் செய்துவிடமுடியாது.
இது நிச்சயமாக முஸ்லிம் மக்களிற்கு எதிரான வெறுப்பை வன்முறையைத் தூண்டும் ஒரு நடவடிக்கை. அந்த உரைமூலம் சட்டம், ஒழுங்கிற்குப் பொறுப்பான அதிகாரிகளிற்கு அவர் ஒரு சவாலையும் விடுத்துள்ளார்.
அவரது உரையில் ஒரு பாசிஸவாதியின் குணம் வெளிப்படையாகத் தென்பட்டது. மக்களிடம் பொய் சொல்வது, சிறிய விடயத்தைப் பெரிதுபடுத்தி மக்களின் உணர்வுகளைக் கொதிப்பேற்றுவது போன்ற பாசிஸவாதிகளிற்கே உரிய குணம். ஞானசார தேரர் அதனையே செய்துள்ளார்.
“”முதலில் அவர்கள் எங்கள் ஆசிரியர்கள் மீது பழுதடைந்த முட்டைகளை வீசினார்கள். அதன் பின்னர் அவர்கள் எங்கள் தலதா மாளிகையை விட பெரிய மசூதியைக் கட்டுவதற்கு முயல்கின்றனர்” ஞானசார தேரரின் உரையில் மிகவும் ஆபத்தான பொய் இது.
ஆனால், இதனை விடவும் ஆபத்தான விடயமொன்றை அவர் தெரிவித்துள்ளார். அது அளுத்கம பாகம் இரண்டு குறித்தது.
ஞானசார தேரரின் மூர்க்கத்தனத்தை இன்னும் அடங்காத அவரின் இனவெறியை மதவெறியை அவரின் மனதில் மறைந்துள்ள பாரிய ஆபத்தை வெளிப்படுத்தியது இந்தக் கூற்றே. பொலிஸாரிற்கும் அவர் எச்சரிக்கை விடத் தவறவில்லை.
இது முன்னைய அரசின் காலத்தில் நாங்கள் பார்த்த ஞானசாரர். ஞானசாரரின் இந்தக் கூற்றுகள் இந்த நாட்டின் பௌத்த மதகுருக்கள் உட்பட அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியவை.
ஆனால், இதுவரை நல்லாட்சி அரசிடமிருந்து ஞானசார தேரரின் இந்தச் செய்கைகளிற்கான கடும் எதிர்ப்பு வெளிப்பட்டதை இன்னும் காணமுடியவில்லை. ஞானசார தேரரைக் கட்டுப்படுத்தத் தவறுவது என்பது நல்லாட்சி அரசின் மீதான பெரும் கரும்புள்ளியாக மாறலாம்.
ஆட்சிமாற்றம் மாத்திரமே மக்களின், மதத்தலைவர்களின் எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துவிடாது என்பது நன்கு அறியப்பட்ட விடயமே.
எனினும், ஏனைய மதங்களிற்கு எதிராக வெறுப்பு, கசப்புணர்வு, பகைமை ஆகியவற்றைத் தூண்டும் ஒரு சக்தியைக் கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு அர”க்குள்ளது.
குறிப்பாக, நல்லாட்சி கொள்கைகளை முன்வைத்து அரியணை ஏறிய அரசிற்கு ஞானசார தேரர் போன்றவர்களைக் கையாளவேண்டிய கடப்பாடு உள்ளது.

ad

ad