புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஜூன், 2016

மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு

தனது மந்திர ஆட்டத்தால் கோல்களை போடுவதில் கைதேர்ந்தவரான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு
பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோற்றதை அடுத்து மெஸ்ஸி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த தோல்வி குறித்து விரக்தி அடைந்து கூறியுள்ளார்.
ஆனால், மெஸ்ஸியின் இந்த முடிவை யாரும் எதிர்பார்க்காத நிலையில், அவர் இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்வார் என கூறப்படுகிறது, மேலும் இவரது ரசிகர்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர்.
அர்ஜென்டினா அணிக்காக 112 போட்டிகளில் ஆடியுள்ள மெஸ்சி, 55 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.