புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2016

சாட்சியமளித்தார் கோத்தா

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளை சந்திப் பகுதியில் கடந்த 2006ம்ஆண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது,

இது தொடர்பான வழக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இரங்கனி பெரேராவினால் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றுகொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெடிப்பு சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விபரித்த்துள்ளார்.

பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அலரிமாளிகைக்கு செல்லும் வழியில் பித்தளை சந்தியை திரும்பிய உடன் பாரிய வெடிப்பு சத்தம் ஒன்றை கேட்டதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.

தான் சென்ற வாகனத்தின் சாரதி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் முன் இருக்கையில் இருந்ததாகவும் தான் பின் இருக்கையில் இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாகனத்தின் கதவு பூட்டி இருந்ததாகவும்,தனது பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை வெளியில் எடுப்பதற்கு பூட்டை உடைத்தார்கள் என்றும் பின் நிறைய வாகனங்கள் எரிந்ததை தான் பார்த்ததாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டும் இது தொடர்பில் தான் அறிக்கை ஒன்றை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் தான் சமர்ப்பித்ததாகவும் கோத்தாபாய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad