புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறது

ஸ்காட்லாந்தின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் - நிக்கோலா ஸ்டர்ஜன்

ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் , ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு முடிவுகள் , ஸ்காட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன என்று கூறியிருக்கிறார்.
ஸ்காட்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்களின் கருத்துக்களை அறிய மற்றுமொரு கருத்துக்கணிப்பு நடப்பதற்கான சாத்தியக்கூறு வெகுவாக அதிகரித்துவிட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
ஷின் ஃப்யின் (ஐரிஷ் குடியரசுக் கட்சியின்) தலைவர் , டெக்லான் கேர்னி , பிரிட்டிஷ் வாக்கெடுப்பின் முடிவுகள், அயர்லாந்து ஒன்றுபடவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கான வாதத்தைப் பலப்படுத்தியிருக்கின்றன என்றார்.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் ஒரு அவசர கால ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு கூட்டப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த வாக்கெடுப்பு முடிவு பிரிட்டனுக்கு மிக மோசமான ஒரு முடிவு என்று அவர் வர்ணித்தார்.

160624023826_nigel_farage_ukip_640x360_g
 கேமரன் பதவி விலகவேண்டும் - நைஜல் ஃபராஜ்
வாக்கெடுப்பின் முடிவு தெளிவாகும் முன்னரே, கன்சர்வேடிவ் கட்சிக்குள் , ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற தரப்பினர், இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவினை அமல்படுத்த பிரதமர் டேவிட் கேமரன் தொடர்ந்து பதவியில் இருக்கவேண்டும் என்று கோரி பத்திரிகைக ஒன்றில் கையெழுத்திட்ட கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தனர்.
ஐக்கிய ராஜ்ஜிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ், பிரதமர் கேமரன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ad

ad