புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

இலங்கைக்கு கொக்கெய்ன் அனுப்பிய சூத்திரதாரி பிரேசிலில் கைது

இலங்கைக்கு பாரியளவில் கொக்கெயன் போதைப்பொருளை அனுப்பி வைத்த முக்கியஸ்தர் பிரேசிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாரிய அளவிலான கொக்கெய்ன் தொகையினை பிரேசிலில் இருந்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு துறைமுகத்தில் 300 கோடி பெறுமதியான கொக்கெய்ன் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பிரேசில் நாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர் தொடர்பில் தகவல் வெளியாகியிருந்தன.

அதற்கமைய உடனடியாக குறித்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வலைப் பின்னலின் பங்காளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கொழும்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பிரேசில் பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட செயற்பாட்டின் பிரதிபலனாக இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கமைய அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 80 கிலோ கொய்க்கெய்ன் இலங்கையில் பயன்படுத்த கொண்டு வரவில்லை எனவும், இந்த நாட்டின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு கொண்டு வரப்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது.

கொக்கெய்ன் எனப்படும் போதைப்பொருள் இந்த நாட்டினுள் பயன்படுத்துவதற்கான எந்த விதமான சாட்சிகளும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேசத்தினுள் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பாரிய போதைப் பொருள் கடத்தல்களுக்கு, கடந்த காலங்களில் இலங்கையிலிருந்து தப்பி சென்று வெளிநாடுகளில் மறைந்திருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் உதவிகளுக்கமைய இந்த நாட்டில் பல்வேறு நபர்களை தொடர்புபடுத்திக் கொண்டு இந்த நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் பகிரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நாட்டில் அதற்காக உதவிகளை வழங்கும் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு தொடர்ந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad