புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

ஜூன் 23 இங்கிலாந்திற்கு சுதந்திரம் கிடைத்த நாளாகும் - நிகல் பேரஜ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர்.

அதிகமான மக்கள் விலக வேண்டும் என வாக்களித்திருப்பதால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரான நிகல் பேரஜ் , ஒரு போரில் வெற்றியடைந்து போன்று உள்ளதாக உணர்கிறேன், இந்த வெற்றியானது உண்மையான மக்கள், சாதாரண மக்கள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.ஊழல், பொருளாதாரம், அரசியல் பிரச்சனைகள் போன்றவற்றோடு போராடிக்கொண்டிருந்த எங்களுக்கு தற்போது வெற்றி கிடைத்துவிட்டதால், இங்கிலாந்து நாடு நேர்மையான பாதையில் இனி பயணிக்கும்.
எவ்வித நாடுகளின் ஆதரவும் இன்றி, தனி நாடாக போராடி இந்த வெற்றியினை பெற்றுள்ளோம். ஜூன் 23 ஆம் திகதி தான் இங்கிலாந்து  வரலாற்றில் சுதந்திரம் கிடைத்த நாளாக கொண்டாடப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ad

ad