புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

அரியானாவில் பயங்கரம்; தம்பதியினர் அடித்துக் கொலை, பெண்-சிறுமி கொள்ளைக் கும்பலால் பாலியல் பலாத்காரம்



அரியானா மாநிலத்தில் மிகவும் பயங்கரமான கொடூரச் சம்பவம் அரங்கேறிஉள்ளது. தம்பதியினர் அடித்துக் கொலைசெய்யப்பட்டு இருபெண்கள்  கொள்ளைக் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். 

அரியானா மாநிலம் மெவாத் மாவட்டம் திங்கேர்ஹேரி கிராமத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இதுதொடர்பாக பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்துஉள்ள புகாரில், நான் மற்றும் என்னுடைய உறவினர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தோம், என்னுடைய மாமனார் மற்றும் என்னுடைய பிற உறவினர்கள் வீட்டிற்கு வெளியே படுத்து இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வெளியே பெரும் சத்தம் கேட்டு அதிர்ச்சியில் நான் எழுந்தேன். அப்போது ஒரு நான்கு, ஐந்து பேர் எங்களுடைய வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களை கயிற்றால் கட்டினர். 

எனது குடும்பத்தினரை இரும்பு தடிகள் மற்றும் கம்புகளை கொண்டு கடுமையாக தாக்கினர். பின்னர் மூன்று பேர் கொண்ட கும்பல் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது. என்னுடைய உறவுக்கார சிறுமியையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர். கொள்ளையர்கள் எங்களது வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளை கும்பல்களில் ஒருவன் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தான், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுவிட்டனர். பாலியல் பலாத்காரம் செய்த கொள்ளையர்கள் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிஉள்ளனர். 

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தப்பி கிராமத்திற்குள் சென்று தகவல் தெரிவித்து உள்ளார். கிராம மக்கள் திரண்டு வந்தும் யாரையும் பிடிக்க முடியவில்லை. கொள்ளையர்கள் கால்சட்டை மட்டும் அணிந்து இருந்தனர் என்றும் அவர்கள் உடல் முழுவதும் எண்ணெய் தடவியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திங்கேர்ஹேரி கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையம் உள்ளது. காலை மூன்று மணியளவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மூன்று மணி நேரம் கழித்து அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று உள்ளனர். 

இதற்கிடையே கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த இப்ராகிம் மற்றும் அவருடைய மனைவி ரஷிதான் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காயம் அடைந்த பிற 5 பேரும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும், சிறுமியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து கிராமத்தில் தங்கிஉள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. 


குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாதிக்கப்பட்டோரின் வீடு மானேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ளது. அப்பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகிறது, இருப்பினும் போலீஸ் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவது கிடையாது என்று தெரியவந்து உள்ளது.

ad

ad