புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

இந்திய நீர்மூழ்கி கப்பலின் ரகசியம் வெளியானது எப்படி?: விசாரிக்குமாறு பிரான்சுக்கு இந்தியா வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்புடன் இந்தியா தயாரித்துவரும் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்தது
எப்படி? என விசாரணை நடத்துமாறு பிரான்ஸ் அரசை இந்திய கடற்படை வலியுறுத்தியுள்ளது.
 இந்திய கடற்படைக்கு பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கார்ப்பியன் நீர்முழ்கி கப்பல் தொடர்பான 22000 பக்கங்கள் அளவிலான ஆவணங்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணங்கள் ஆஸ்திரேலிய பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
டி.சி.எஸ்.என் என்ற நிறுவனத்தின் வடிவமைப்பில் இந்தியாவில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டு, மும்பை அருகேயுள்ள ‘மாசெகான் டாக் லிமிட்டட்’ கப்பல் கட்டும் துறைமுகத்தில் ஒரு கப்பல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இந்தியாவின் கடல் பாதுகாப்பில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி உள்ளது.  இந்திய பாதுகாப்புத்துறையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்மூழ்கி கப்பலின் அனைத்து பாதுகாப்பு அம்சங்கள், வடிவமைப்பு தகவல்கள், சென்சார்களின் எண்ணிக்கை, தாக்கும் திறன் அனைத்துமே வெளியாகி உள்ளதால், இந்திய கடல்பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், ஆவணங்கள் வெளியானது பற்றி கருத்து தெரிவித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ’இந்த விவகாரம் நேற்று நள்ளிரவு எனது கவனத்துக்கு வந்தது. முதலில், இந்த ஆவணங்கள் கப்பலுடையதுதானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முதல் நடவடிக்கை ஆகும். எனினும், 100 சதவீத விபரங்கள் கசியவில்லை.
கப்பலின் எந்த விஷயங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது என்பதை ஆய்வு செய்யுமாறு கடற்படை தளபதியை கேட்டுக்கொண்டுள்ளேன்.  இந்த ஆவணங்கள் இந்தியாவில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை. கம்ப்யூட்டர்களில் இருந்து ஹேக்கிங் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். இதை நாங்கள் விரைவில் கண்டறிவோம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா தயாரித்துவரும் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்தது எப்படி? என விசாரணை நடத்துமாறு பிரான்ஸ் அரசை இந்திய கடற்படை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, இன்று கருத்து தெரிவித்துள்ள இந்திய கடற்படை உயரதிகாரிகள், ’ஸ்கார்ப்பியன் கப்பல் தயாரிப்பு தொடர்பான ரகசியங்கள் கசிந்த விவகாரம் தொடர்பான பிரச்சனையை பிரான்ஸ் அரசிடம் நாங்கள் கொண்டு சென்றுள்ளோம். இதுதொடர்பாக, உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தெரியவரும் விபரங்களை இந்தியாவிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இந்தியாவின் தரப்பில் ஏதேனும் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad